Saturday, 12 October 2024

சயாம் பர்மா மரண ரயில் பாதை

சயாம்-பர்மா மரண ரயில் பாதை மறக்கப்பட்ட வரலாற்றில் ஈர்ப்பு.-
சீ.அருண்
தமிழோசைப் பதிப்பகம்
கோவை
விலை-₹180
"தமிழர்கள் தம்வாழ்வில் நடந்தவற்றினைப் பற்றிய குறிப்புகளை முறையாகவும் செம்மையாகவும் எழுதாமல் இருக்கின்றனர்.காலந்தோறும் தமிழர்கள் செய்த தவறு இது "என்கிறார் ஆசிரியர்.
"அந்த காலத்தில் ஜப்பான் காரன் சயாமுக்கு ஆள் பிடித்தான்.... என்ற சொற்களோடு தொடங்கும் தாயாரின் வரலாற்று நினைவுகள் என்னை நெகிழச் செய்தன. ஜப்பானியர்கள் இழைத்த கொடுமைகளைக் கேட்டு மனம் கசிவுற்றது. தமிழர்கள் எதிர் நோக்கிய வாழ்வியல் இன்னல்களை என்றென்றும் நினைப்பதற்கும் உணர்வதற்கும் களமொன்று தேவைப்படுகிறது. அதற்குரிய தளங்களுள் ஒன்றாக இந்நூல் அமைய வேண்டும் என்பதே ஆசிரியரின் நோக்கமாக கூறுகிறார்.
இந்த நூலின் பெயரைக் கண்டதும் 2015 இல் உடனே வாங்கத் தோன்றியது.இப்போதுதான் படிக்க நேர்ந்தது என்பதை எண்ணி வருந்துகிறேன்.
தமிழர்கள் தங்கள் வரலாறை எங்கும் எப்போதும் எழுதி வைக்காத காரணத்தால் , தமிழர்கள் தங்கள் வரலாறை, தங்களின் பண்பாட்டை ,தாங்கள் பெற்ற துயரத்தை வாய்மொழியாக மட்டுமே கடத்தியுள்ளனர்,
சங்க இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் விழுமியங்கள் இன்றும் வியக்க வைக்கிறது ஆனால் நடுவில் உள்ள காலங்களில் தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் வரலாறு என்ன? அரசர்களின் வரலாறு தான் அவர்களுடைய வரலாறா? என்ற கேள்வி எழுகிறது.
உருவாக்கப்பட்ட தாது வருடப் பஞ்சத்தால் வறுமையின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க கூலி வேலைக்காக சுமேரியா ,கொரியா,பிஜு தீவு, மலேசியா போன்ற பல நாடுகளுக்கு பிழைக்கச் சென்றுள்ளனர்.
ஆசிய நாடுகளில் பலவற்றை  சப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நிலையில் சயாம் மற்றும் இந்தியாவைப் பிடிக்க தரை வழியாக பாதை அமைக்க முடிவு செய்து சயாம் -பர்மா தொடர்வண்டிப் பாதை அமைக்கத் திட்டமிடுகின்றனர்.
இந்தப் பாதையை அமைக்க வெற்றி பெற்ற நாடுகளில் பிடித்த போர்க் கைதிகளான வெள்ளைக்காரர்களை  மற்றும் கட்டாயப்படுத்தியும் ஆசை காட்டியும் அழைத்து வந்த மலேயா மக்கள் தமிழர்கள், சீனர்கள் என ஆயிரக்கணக்கான மக்களை கொடுமையான முறையில் துன்புறுத்தி சயான் பர்மா மரண ரயில் பாதையில் அமைத்த வரலாறை கூறும் நூல் இது. இந்த நூல் வரலாற்று ஆதாரங்களுடன் சயாம் - பர்மா ரயில் பாதை எவ்வாறு அமைக்கப்பட்டது என்பதை எடுத்துக் கூறுகிறது .மேலும் அந்தப் பணியில் ஈடுபட்ட மலேயா தமிழர்களின் நேர்காணலுடன் இந்த நூல் காலத்தின் துன்பியல் பக்கங்களை ,தமிழர்களின் வாதைகளை நமக்கு கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, மனதைக் கலங்க வைக்கும் நூலாக அமைந்துள்ளது என்பதை இந்நூலைப் படித்தவர்கள் உணர முடியும்.
"அச்சு அணி நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளுக்கும்,நேசநாடுகளான பிரிட்டன் போலந்து பிரான்சு நாடுகளுக்கும் நடந்த அதிகாரத்தை கைப்பற்றும் போராக இரண்டாம் உலகப் போர் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முதல் நாளில் தொடங்கி 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் இரண்டாம் நாளில் முடிவுற்றது.
ஜப்பான் வலிமையாக தாக்கும் போது சீனாவும் இத்தாலியும் நேச நாடுகளுடன் இணைந்து வலிமையைக் கூட்டின.
இந்தப் போரில் பத்து கோடிப் படைவீரர்களும் ஏழு கோடிப் பொதுமக்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.6 கோடி மக்கள் உயிரிழந்து உள்ளனர்.சோவியத் யூனியன் இரண்டு கோடி மக்களையும் போலந்து அதிகமான மக்களையும் இழந்துள்ளது."என்கிறார்.
போலந்து நாட்டில் உள்ள மியூசியத்தில் ஹிட்லர் படையினரால் கொல்லப்பட்ட காட்சியை ஒலி ஒளிக் காட்சியாகப் பார்த்த போது இதை உணர முடிந்தது.
"உலகமே இதனால் பாதிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தான் மிக மிக அதிக எண்ணிக்கையிலான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன .உலகின் பல நூறு நகரங்களும் பொதுமக்கள் வாழ்விடங்களும் அழிவுற்றுள்ளன உலக மக்கள் பட்டினி ,நோய், வறுமை போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாயினர் "என்று ஆசிரியர் புள்ளி விவரங்களுடன் கூறுகிறார்.
""ஆசியா ஆசியர்களுக்கே" என்ற முழக்கத்துடன் ஜப்பான் கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்து வெற்றியும் கண்டது.பர்மா இந்தோ சீனா மலாயா சிங்கப்பூர் இந்தோனேஷியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை ஜப்பான் கைப்பற்றியது. சயாம் ,இந்தியா மட்டுமே மீதமிருந்தது இதில் சயாம் தனது மக்களை போரினால் இழக்க தயாராக இல்லாத காரணத்தால் ஜப்பானுக்கு பணிந்து வழிவிட்டது.
இந்தியாவை பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில் பிரிட்டிஷாரை விரட்டி விட்டு இந்தியாவைப் பிடிக்க திட்டம் போட்ட ஜப்பான் அதற்காக தரைவழி தாக்குதலில் ஈடுபடுவதற்கு சயாம் -பர்மா தொடர்வண்டி பாதையை அமைக்க திட்டமிட்டது. இந்திய தேசிய இராணுவத்தை ராஷ் பிகாரி போஸ் தோற்றுவித்தார் அவரது இழப்பிற்கு பின்னர் நேதாஜி தலைமையேற்றார். அதான் ஜப்பான் உடன் இணைந்து இந்திய தேசிய ராணுவத்தை வலிமைப்படுத்தினார்.
ஜப்பான் சிங்கப்பூரில் கைப்பற்றிய பிறகு சிங்கப்பூரின் பெயரை சோனான் என்று பெயர் மாற்றியது புதிய செய்தியாக இருந்தது சோனா என்பது கிழக்கின் ஒளி என்னும் பொருளை உணர்த்துகின்றது இப்படியாக ஜப்பான் ஒவ்வொரு நாடாக கைப்பற்றி கொண்டு வந்த நிலையில் சீனர்களை கண்டாலே அவர்களின் கழுத்தை வெட்டி சாலை சந்திகளில் தொங்கவிடுவது இயல்பாக காணக்கூடிய காட்சியாக சீனர்களை மிக அதிகமாக வெள்ளைக்காரர்களை மிக அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டு இருப்பதை இந்த நாவலில் அறிய முடிகிறது  மலேயாவைக் கைப்பற்றிய பிறகு கல்விச் சொல்லில் ஜப்பான் மயமாக்கப்பட்டு நிப்பான் மொழி கற்பிக்கப்பட்டது ஜப்பானிய ஆண்டு கணக்கின் அடிப்படையில் குழந்தையின் பிறந்த நாள் கூட எழுதப்பட்டுள்ளது 25 3 1944 இல் பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் 25 3 2600 என்று எழுதப்பட்டுள்ளது" என்பதை  ஆவணத்துடன் இந்த நூல் காட்டுகிறது அது மட்டுமல்லாமல் "ஜப்பான் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் பயன்படுத்திய பணத்தாளை அறிமுகம் செய்கிறது இந்த பணத்தாலில் வாழைமரம் அச்சடிக்கப்பட்டிருந்ததால் தமிழர்கள் இதை வாழைத்தார் பணம் என்று சொன்னார்கள் பிறகு இது மதிப்பெற்றதாக ஆனதை அறிய முடிகிறதுஇந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மலேயா தமிழர்களை அடிப்பதும் ஏசுவதும் ஜப்பானியர்களின் வழக்கமாக இருந்துள்ளது.
பல நூறு தமிழ் பெண்களை கற்பழித்து அவர்களின் குடும்பத்தினரையும் சீரழித்து உள்ளன என்பது வேதனைக்குரிய விஷயம் 19 39 ஆம் ஆண்டில் உலகிற்கு தேவைப்படும் ரப்பரில் 40% மழையா கொடுத்தது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இங்கிருந்து கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் என்பதை காரணம் என்பதை சொல்லாமலே உணர முடிகிறது.
தனது போர்படைகளை பர்மா வழியாக இந்திய எல்லைக்கு அனுப்பி இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்திற்கு சயாம்-பர்மா தொடர்வண்டி பாதை கட்டுவது தீர்க்கமான முடிவாகும் என்றும் அதற்காக ஆள் பிடிப்பதற்காக மலேயா மக்களிடம்  ஆசை காட்டி ,அச்சுறுத்தி பிடித்து வந்துள்ளனர்." ஆள் பிடித்தல் ,ஆள் கட்டுதல்" என்ற இந்த செயலை செய்பவர்களுக்கு ஆள்காட்டி என்ற பட்டப்பெயரும் அமைந்துள்ளது. தொடர் வண்டிப் பாதைக் கட்டுமான தொழிலுக்கு போனால் அதிகமான சம்பளம் வழங்கப்படும் என்ற செய்தி மக்களிடையே பரப்பப்பட்டது. ஒரு திங்கள் வேலை செய்தால் நிறைய சம்பாதித்து திரும்பி விடலாம் என்று கூறி ஆர்வத்தை தூண்டி  மக்களின் அதிகமானோர் சயாமிற்கு வந்துள்ளனர் .
இதனால் இடைத்தகர்களுக்கு தலை கணக்கு கூலி கொடுக்கப்பட்டுள்ளது செய்திகள் மூலம் அறிய முடிகிறது. பர்மாவிற்கு செல்லும் தமிழர்களுக்கு இந்தியா செல்வதற்கான வாய்ப்பு உள்ளது பர்மாவிலிருந்து இந்தியா வெகு தூரம் இல்லை ,அங்கிருந்தே இந்தியா சென்று விடலாம் என்று கூறி ஆசை காட்டி உள்ளனர்,
வரலாற்று அடிப்படையில் தெற்காசிய மக்கள் எதிர்நோக்கிய மிக துயரமான நிகழ்வுகளில் சயாம்-பர்மா தொடர் வண்டிப் பாதை கட்டுமானப் பணியும் ஒன்றாகும். இந்த வரலாற்று நிகழ்வினை தமிழர்கள் சயாம் மரண ரயில் பாதை என்கின்றனர் இதில் மரணம் என்னும் சொல் பொருள் புரிந்ததாக உள்ளது என்கிறார் .
ஆய்வாளர்கள் இந்த நிகழ்வினை போர் குற்றம் என்கின்றனர் ஒரு இனத்தாரின் தன்னளத்திற்காக பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை துச்சமாக எண்ணி கொடுமை செய்துள்ளனர் .
இந்த நூலில் உள்ள வரைபடங்களும் புகைப்படங்களும் சயாம்- பர்மா மரண  பாதையின் துயரங்களை நமக்கு கண்முன் காட்டுகிறது .
ஜப்பானில் இத்தகைய கொடுஞ்செயலினை ஆசியர்களின் அழிவு என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். சிங்கப்பூரில் மட்டும் 80,000  நேசப்டை வீரர்களைப் பிடித்து போர்க் கைதிகளாக ஆக்கியுள்ளனர் இவர்களில் ஆசியர்களே அதிகமானோர் மலேயாவிலிருந்து பர்மா போகும் பயணத்தின் போது போர் கைதிகள் மலம் கழிப்பதை தவிர்க்க அவர்களின் மலத் துவாரத்தில் ஒரு வகை மருந்து திணிக்கப்பட்டுள்ளது. மலத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்ட இந்த மருந்து. இச்செயலால் தொழிலாளர்களோடு பல பெரும் வேதனைக்குள்ளாகி மாண்டனர் என்ற செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரக்கூடியதாக உள்ளது .ரயில் பெட்டிகளில் இங்கிருந்து அழைத்துச் செல்லும் பொழுது  உட்க்கார, நிற்பதற்கு கூட இடமின்றி மக்களை அழைத்துச் சென்றுள்ளனர் .ரயில் பெட்டிகளில் செல்லும் பொழுது தான் அவர்களுக்கு தவறான முடிவு எடுத்து இருக்கிறோம் என்பதை பலர் உணர்ந்துள்ளனர்.
2,70,000 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  பெரும்பாலானோர் இந்தியர்களே வேலை செய்துள்ளனர். ஆனால் தமிழர்கள் மிகக் குறைந்த அளவே வேலை செய்தனர் என்று இருட்டடிப்பு செய்வது வழக்கமாக உள்ளது
இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் லிவர் புல் பிரபுவான லார்டு ரஸ்ஸல்  என்பவர் நைட் சாங் பூசிடோ எ ஷார்ட் ஸ்டோரி ஹிஸ்டரி ஆப் ஜப்பானீஸ் வார் க்ரைம்ஸ் என்ற நூலினை எழுதியுள்ளார்.  மிக ஆழமாக ஆய்வு செய்தபட்ட அந்த நூலில் "பெண்களும் குழந்தைகளும் கை, கால்கள் கட்டப்பட்டு வெயிலில் பல மணி நேரம் நிற்க வைக்கப்பட்டனர் .ஆண் பெண் என்ற இருபாலரும் வயது வேறுபாடு இன்றி கொடூரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களை பிடித்து வைத்திருந்த ஜப்பானியர்களின் துன்புறுத்தி மகிழும் குரூர மனநிலையை இங்கு எளிதில் விவரிக்க முடியாது" என்று குறித்துள்ளார் தமிழர்கள் மீது ஜப்பானியர்கள் இழைத்த கொடுமைகள் இத்தோடு முடியவில்லை. கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து  கொண்டிருந்தன" என்கிறார்.
இந்த தொடர்வண்டி பாதை கட்டுமான பணியில் தாகத்தை தணிக்க ஓடையில் நீர் குடித்தவர்கள் கும்பல் கும்பலாக இறந்தனர். புலி அடித்து இறந்தவர்கள் ,காட்டு யானை தாக்கி இறந்தவர்கள், பாம்பு கொத்தி மாண்டவர்கள், தேள் கொட்டி உயிர் துறந்தவர்கள், பாறை வெடித்து சிதறியதால் இறந்தவர்கள் ,சுமந்த மண்ணின் கணத்தால் இறந்தவர்கள், கால் இடறி பெரும்பள்ளத்தில் விழுந்து இறந்தவர்கள், மழை குளிருக்கு உயிர் கொடுத்தவர்கள், தீராத புண் காரணமாக இறந்தவர்கள், தப்பி ஓடும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள்,, குடும்பத்தாரை பிரிந்து ஏக்கத்தில் இறந்தவர்கள், ஜப்பானியர் கொடுமைகளைத் தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் என பல்வேறு ஆயிரக்கணக்கில் மக்களை இழந்து தான் அந்த சயாம்-பர்மா தொடர்வண்டி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்போது நமது நாட்டில் ஓடக்கூடிய இருப்பு பாதைகளை நினைத்தாலும் அந்த எண்ணங்கள் வராமல் இருக்க முடியாது என்று தோன்றுகிறது .தொழிலாளி கடைசி மூச்சு விடும் வரை உழைக்க வேண்டிய இருந்துள்ளது. சயாம்-பர்மா தொடர் வண்டிப் பாதை 16,000 போர் கைதிகள் , 75 ஆயிரம் ஆசிய தொழிலாளர்கள் பிணங்களின் மீது கட்டப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஒவ்வொரு தண்டவாள கட்டைக்கு அடியில் ஒரு பிணம் புதைந்துள்ளது என்கின்றனர் என்பதைப் படிக்கும் பொழுது வலியும் வேதனையும் உருவாகின்றது.
ஊரும் உறவுமற்ற பல பெண்கள் ஜப்பானியர்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். ஜப்பானியர்களை எதிர்க்கும் பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். பிள்ளை பெற்ற சில மணி நேரத்திற்கு பிறகு பெண் ஒருத்தியை தண்டவாளக் கட்டையை சுமக்க வைத்துள்ளனர் ஜப்பானியர்கள்.
இந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் கூறியுள்ளனர். மாலை நேரங்களில் நடத்தப்படும் மது விருந்துகளில் தன் விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக இளம் தமிழ்ப் பெண்கள் பலரை நிர்வாண நடனம் ஆட வைத்துள்ளனர். பிறகு விருந்தினர்களால் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்டனர். இப்படியாக பல தகவல்களை நமக்கு இந்த நூல் நமக்கு தெரிவிக்கிறது தொழிலாளர்களை தங்க வைக்க மூங்கிலால் ஆன நீண்ட குடில்களும் அதிலிருந்து நோய்வாய்ப்பட்டவர்களை தங்க வைக்க தனியாக ஒரு கொட்டகையும் போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவாக வெள்ளைச்சோறு கீரை சாறு குடித்த கருவாடு இதுவே அன்றாட உணவாக இருந்துள்ளது. பல பிரிவுகளாக பிரித்து அங்கங்கே முகாமிற்கு மக்களை அனுப்பி இந்த பாறையின் பணியில் ஈடுபட வைத்துள்ளனர் என்பதை உணர முடிகிறது.
இறந்தவர்களை குழிவெட்டி அந்த குழி நிறையும் வரை அந்த குழியிலேயே பாதிஉயிருடன் இருந்தவர்களையும் போட்டு உள்ளனர்.
ஒருவர் சொல்கிறார் நான் போய் பார்க்கும் பொழுது குழியில் இருந்து புழுக்கள் மேலே வந்தன  என்று சொல்கிறார் இறந்தவர்களின் உடலில் இருந்து புழுக்கள் மேலே துள்ளி குதித்துள்ளன என்பதை காட்டுகின்றது பொணக்குழி என்று கூறப்பட்ட அந்த குழி நிறைந்த பிறகு அதை மூடி பக்கத்திலேயே அடுத்தக் குழியைத் தோண்டி உள்ளனர்.
அந்த குழி இறந்து போன ,இறக்கும் மனிதர்களுக்காக காத்திருந்திருக்கிறது இப்படியாக இந்த நூல் மக்கள் சயாம் -பர்மா தொடர் வண்டிப்பாதை  அமைக்கும் பணியில் மக்கள் எவ்வளவு துயரங்களை சந்தித்துள்ளனர் என்பதைக்  காட்டுகிறது.சயாமியப் பெண்களை  யானைப் பாகங்களாகப் செயல்பட்டதை அறிய முடிகிறது .
தமிழர்கள் அப்பொழுதே மலேரியா காலரா நோய்களை குணப்படுத்த பப்பாளி இலையை அரைத்து அதன் சாறினை குடித்துள்ளனர் என்பதை காண முடிகிறது.
ஹெல்ஃபயர் கணவாயில் பெரிய குன்றை வெட்டி அதில்  பாதை அமைத்துள்ளனர் .இந்த இடத்தை நரகத் தீக்கணவாய் என்கின்றனர்.
நாகசாகி ஹிரோஷிமா அழிவிற்கு பிறகு ஜப்பான் மெல்ல வீழ்ச்சி அடைய துவங்கியுள்ளது .அதன் பிறகு இந்த மக்களை அமெரிக்க அரசு அவரவர்கள் நாட்டுக்கு அனுப்பி உள்ளது.
அந்த மக்களுக்கு கிடைத்த இழப்பீட்டு பணத்தை கூட மலேயா அரசு இன்னும் வழங்கவில்லை என்பது கொடுமையான துயரமாகும். அங்கு வாழ்கின்ற  தமிழர்களின் நேர்காணலுடன் ,இந்த நூல் நம்மை ஒரு வரலாற்றின் துயரத்தின் பக்கங்களை அறிமுகம் செய்து முடிகிறது தமிழர்கள் தங்கள் வரலாறை எழுதாமல் இருப்பதும், ஒன்றிணைந்து தங்களுக்கான சங்கங்களை அமைத்து குரல் கொடுக்காமல் இருப்பதும் தமிழர் வரலாற்றை அறியாமல் இருட்டடிப்பு செய்வதை உணர முடிகிறது மொத்தத்தில் இந்த நூல் கூலிக்காக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் நிலையை கண்முன் காட்டி சயாம்- பர்மா தொடர் வண்டிக் கட்டுமானப் பாதை தமிழர்களின் குருதியால் ஆசிய மக்களின் மரண ஓலங்களால் உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்தி முடிகிறது.
தமிழர்களுக்கு நியாயம்  கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமத்திற்கிடையில் எழுதிய நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Monday, 9 December 2013

சீரகக் குழம்பு

அரைக்க

சீரகம் -2ஸ்பூன்
சின்ன வெங்காயம்-10
தக்காளி-2
புளீ -தேவைக்கேற்ப
சாம்பார்பொடி-2ஸ்பூன்

தாளிக்க

வெந்தயம்,சீரகம்,கறிவேப்பிலை.

காய்
கத்திரிக்காய் (அ)முருங்கைக்காய்

அரைக்க வேண்டியவற்றை அரைத்து கொண்டு வானலியில் நல்லெண்ணெய் விட்டு தாளித்து வெந்தயம் ,சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து காயை சேர்த்து வதக்கி அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு காய் வெந்தவுடன் இறக்கவும்.

பயன்

உடல் சூடு குறைக்கும்.


Sunday, 10 November 2013

ஆரோக்கியம்

இப்பகுதியில் ஆரோக்கியம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.பாரம்பரியச் சமையல் குறித்த கருத்துக்களும் இதில் அடங்கும்.

நல்ல விசயத்தை நெல்லிக்காயிலிருந்து துவங்குகிறேன்
.நெல்லியின் பயன் அனைவரும் அறிந்ததே.தினம் ஒரு நெல்லி உண்பவர்களுக்கு நோய் தொடர்பெல்லைக்கு அப்பால் போய்விடும் .இது தெரிந்தும் கடைபிடிப்பதில் ஒரு அலட்சியம் எல்லோருக்கும் உண்டு.

நெல்லிக்காய் சாதம்
-----------------------------------
தேவையான பொருட்கள்
சீரகம்1ஸ்பூன்,வெங்காயம்10,கறிவேப்பிலை,பச்சைமிளகாய்3,உளுந்து பொடி 1ஸ்பூன்,உப்பு.நல்லெண்ணெய்,நெல்லிக்காய்8,250gசாதம்

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொண்டு,வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சீரகம்,கறிவேப்பிலை போட்டு தாளித்து,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,பச்சமிளகாய் சேர்த்து வதக்கி,நெல்லிக்காயை கொட்டை நீக்கி நன்கு அரைத்துக்கொண்டு சேர்க்கவும்.பச்சை வாசனை போகும் வரை வதக்கி தேவையான உப்பு சேர்த்து,உளுந்துபொடி சேர்த்து கிளறி சாதம் சேர்த்து கிளறவும்.
பயன்
உடல் குளிர்ச்சி